நிலுவையில் உள்ள வழக்குகள் கோட்பாடு - உச்ச நீதிமன்றம்
October 22 , 2024 34 days 99 0
நிலுவையில் உள்ள வழக்குகள் (லிஸ் பெண்டன்ஸ்) கோட்பாட்டிற்கு ஒரு பரிமாற்றச் செயல்முறை பாதிக்கப்படுவது உடனே கண்டறியப் பட்டவுடன் ஒரு சான்றளிக்கப் பட்ட வாங்குபவர் மற்றும் விற்பனை ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பு இல்லாமை போன்றப் பாதுகாப்பு கிடைக்கப் பெறாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரு பொதுவான பேச்சு வழக்கில் லிஸ் பெண்டன்ஸ் என்றால் "நிலுவையில் உள்ள சட்ட நடவடிக்கை" என்று பொருள்படும்.
சொத்து பரிமாற்றச் சட்டத்தின் 52வது சட்டப் பிரிவில் லிஸ் பெண்டன்ஸ் கோட்பாடு இடம் பெற்றுள்ளது.
அசையாச் சொத்தின் பரிமாற்றம் தொடர்பான வழக்கு ஏதேனும் நிலுவையில் இருந்தால், அது அசையாச் சொத்து தொடர்பான பங்குதாரர்களின் உரிமைகளைப் பாதிக்காது என்று குறிப்பிடுகிறது.
ஆனால், வழக்கு நிலுவையில் உள்ள போது சொத்தை வாங்கிய நபர், அந்த வழக்கில் வழங்கப் படும் தீர்ப்பிற்குக் கட்டுப்பட்டவர் ஆவார்.