TNPSC Thervupettagam

நிலையான நீர்ப்பிடிப்பு வன மேலாண்மை

January 18 , 2019 2010 days 665 0
  • திரிபுராவின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் சமீபத்தில் மேற்கு திரிபுராவில் உள்ள ஹாதிபாராவில் நிலையான நீர்ப்பிடிப்பு வன மேலாண்மைக்காக (Sustainable Catchment Forest Management - SCATFORM) ஒரு திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
  • இது 1000 கோடி ரூபாய் மதிப்புடைய திரிபுராவின் மையப்படுத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளை மேம்படுத்துவதற்காக 10 ஆண்டுகால அளவில் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமாகும்.
  • இந்த திட்டத்திற்கு இந்திய அரசாலும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தாலும் (Japan International Cooperation Agency – JICA) இணைந்து நிதியளிக்கப்படுகின்றது.
    • 80 சதவிகிதம் – ஜப்பான் மற்றும் 20 சதவிகிதம் – மத்திய, மாநில அரசுகள் (இந்தியா).
  • இத்திட்டத்தின் கீழ், திரிபுராவின் ஏழு மலைப்புற மாவட்டங்களில் மொத்தமாக 1447 தடுப்பணைகள் கட்டப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்