11வது நிலையான மலை மேம்பாட்டு உச்சி மாநாடானது (SMDS-XI) லடாக்கின் லே நகரில் நடைபெற்று வருகிறது.
இது இந்திய இமயமலைப் பகுதி (IHR) முழுவதும் செயலாற்றி வரும் ஒரு குடிமை சார்ந்த சமூக அமைப்பின் தலைமையிலான மன்றமான ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு முன்னெடுப்பின் (IMI) ஒரு முதன்மையான வருடாந்திர நிகழ்வாகும்.
இந்திய இமயமலைப் பகுதியானது 10 மலைசார் மாநிலங்கள், இரண்டு ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் நான்கு மலைசார் மாவட்டங்களை உள்ளடக்கியது.
இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு, ‘சுற்றுலாப் பயணத்தை நிலையான மலை மேம்பாட்டிற்குப் பயன்படுத்துதல்’ என்பதாகும்.