TNPSC Thervupettagam

நிலையான மேம்பாட்டு இலக்குக் குறியீட்டில் தமிழ்நாட்டின் செயல்திறன் 2023-24

July 20 , 2024 10 hrs 0 min 104 0
  • 2023-24 ஆம் ஆண்டு இந்தியாவின் நிலையான மேம்பாட்டு இலக்கு நிவர்த்திக் குறியீடானது 70 இலக்குகள் மற்றும் 113 குறிகாட்டிகளின் அடிப்படையில் இலக்குகளை அடைவதில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் நிர்வாகச் செயல்திறனை பகுப்பாய்வு செய்துள்ளது.
  • தமிழ்நாடு மாநிலமானது 78 என்ற கூட்டு மதிப்பெண்களுடன், 71 என்ற தேசிய சராசரியினை விஞ்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் 13 நிலையான மேம்பாட்டு இலக்குகளில் (SDGs) தமிழ்நாடு ‘முன்னணி மாநிலமாக’ வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது மாநிலங்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் அவற்றின் செயல்திறன்களை ‘இலட்சியமிகு மாநிலம்’ (0-49), ‘நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாநிலம்’ (50-64), ‘முன்னணியில் உள்ள மாநிலம்’ (65-99) மற்றும் ‘சாதனை மாநிலம்’ (100) என வகைப்படுத்துகிறது.
  • தமிழ்நாடு மாநில அரசானது தனது முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தைய அறிக்கையில் தமிழகத்தின் கூட்டு மதிப்பெண் 74 ஆக இருந்தது.
  • மற்ற மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில், வறுமை ஒழிப்பு இலக்கில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • பல்பரிமாண வறுமைக் குறியீட்டின்படி, 14.96% என்ற தேசிய சராசரிக்கு எதிராக நமது மாநிலத்தின் செயல்திறன் 2.2% ஆக உள்ளது.
  • மாநிலத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 22% மற்றும் 25% பேர் முறையே எடை குறைவாகவும் வளர்ச்சி குன்றியவர்களாகவும் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
  • ஒரு லட்சம் பிறப்புகளுக்கான பேறு காலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் மற்றும் 1,000 பிறப்புகளுக்கான ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவை முறையே 54 மற்றும் 13 ஆக உள்ளது.
  • சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் விகிதம் ஆனது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 23.31 ஆக உள்ளது என்ற நிலையில் இது நாட்டிலேயே மிக அதிகமாகும்.
  • உயர்நிலை மற்றும் உயர்கல்வியில் மாணவர்களின் மொத்தச் சேர்க்கை விகிதமானது முறையே 81.5% மற்றும் 47% ஆக உள்ளது.
  • இதன் தேசிய சராசரி 57.6% மற்றும் 28.4% ஆகும்.
  • மேலும், தமிழ்நாட்டில் உள்ள 81.87% கிராமப்புறக் குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் குழாய் இணைப்பு வசதியினைப் பெற்றுள்ளன.
  • நமது மாநிலத்தில் 15-59 வயதிற்குட்பட்டோர் மத்தியில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் மற்றும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஆகியவை முறையே 4.8% மற்றும் 62.3% ஆக உள்ளது.
  • சுமார் 92.8% குடும்பங்கள் குறைந்தபட்சம் ஒரு கைபேசியாவது வைத்திருக்கிறார்கள்.
  • ஆதார் மூலம் உள்ளடக்கப்பட்ட மக்கள் தொகையின் சதவீதம் 97.94 ஆகும்.
  • 7.2% ஆக இருந்த இந்த மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 4.8% ஆக குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்