நிலையான விகித மருந்துக் கலவை சார்ந்த மருந்துகளுக்குத் தடை
September 5 , 2024 79 days 112 0
இந்திய அரசாங்கம் செஸ்டன் கோல்ட் மற்றும் ஃபோராசெட் போன்ற பிரபலமான மருந்துகள் உள்ளிட்ட சுமார் 156 நிலையான விகித மருந்துக் கலவை சார்ந்த (FDC) மருந்துகளை (பல்வேறு மருந்துகள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒரே மருந்தாக கலக்கப் பட்ட மருந்து) தடை செய்துள்ளது.
FDC என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறியப்பட்ட மருந்துகளின் ஒற்றைத் தவணை வடிவிலான கலவையாகும்.
2018 ஆம் ஆண்டு முதல், இதுபோன்ற 328 மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.
FDC மருந்துகள் ஆனது, காசநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்றப் பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளுக்கானது என்பதோடு இது போன்ற நோய்ப் பாதிப்பு உள்ள நபர்கள் அதற்காகத் தொடர்ந்து பல மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
நோயாளிகள் ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகளின் இவை எண்ணிக்கையைக் குறைத்து அதன் மூலம் மருத்துவச் சிகிச்சையை இடைவிடாது கடைப்பிடிப்பதை மேம்படுத்த உதவுகின்றன.
1988 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டில் உற்பத்தி மற்றும் விற்பனைக்காக அங்கீகரிக்கப் பட்ட 3,450 FDC மருந்துகளை ஆய்வு செய்ய அரசாங்கம் ஆனது 2014 ஆம் ஆண்டில் ஒரு குழுவை அமைத்தது.
இக்குழு அதில் 963 மருந்துகளை மிக முரணானவை எனக் கண்டறிந்து, உடனடியாக அவற்றைத் தடை செய்ய பரிந்துரைத்தது.
மேலும் ஆய்வு செய்ய வேண்டிய FDC மருந்துகளின் தொகுப்பையும் இது அடையாளம் கண்டுள்ளது.
இவற்றில் இதுவரை 499 FDC மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.