TNPSC Thervupettagam

நிலையான விகித மருந்துக் கலவை சார்ந்த மருந்துகளுக்குத் தடை

September 5 , 2024 79 days 111 0
  • இந்திய அரசாங்கம் செஸ்டன் கோல்ட் மற்றும் ஃபோராசெட் போன்ற பிரபலமான மருந்துகள் உள்ளிட்ட சுமார் 156 நிலையான விகித மருந்துக் கலவை சார்ந்த (FDC) மருந்துகளை (பல்வேறு மருந்துகள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒரே மருந்தாக கலக்கப் பட்ட மருந்து) தடை செய்துள்ளது.
  • FDC என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறியப்பட்ட மருந்துகளின் ஒற்றைத் தவணை வடிவிலான கலவையாகும்.
  • 2018 ஆம் ஆண்டு முதல், இதுபோன்ற 328 மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.
  • FDC மருந்துகள் ஆனது, காசநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்றப் பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளுக்கானது என்பதோடு இது போன்ற நோய்ப் பாதிப்பு உள்ள நபர்கள் அதற்காகத் தொடர்ந்து பல மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
  • நோயாளிகள் ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகளின் இவை எண்ணிக்கையைக் குறைத்து அதன் மூலம் மருத்துவச் சிகிச்சையை இடைவிடாது கடைப்பிடிப்பதை மேம்படுத்த உதவுகின்றன.
  • 1988 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டில் உற்பத்தி மற்றும் விற்பனைக்காக அங்கீகரிக்கப் பட்ட 3,450 FDC மருந்துகளை ஆய்வு செய்ய அரசாங்கம் ஆனது 2014 ஆம் ஆண்டில் ஒரு குழுவை அமைத்தது.
  • இக்குழு அதில் 963 மருந்துகளை மிக முரணானவை எனக் கண்டறிந்து, உடனடியாக அவற்றைத் தடை செய்ய பரிந்துரைத்தது.
  • மேலும் ஆய்வு செய்ய வேண்டிய FDC மருந்துகளின் தொகுப்பையும் இது அடையாளம் கண்டுள்ளது.
  • இவற்றில் இதுவரை 499 FDC மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்