நிலையான வைப்பு நிதி வசதியானது அதிகப் பணப்புழக்கத்தை திரும்பப் பெறுவதற்கான ஒரு வலுவான கருவியாக கருதப்படுகிறது.
இந்த வசதி இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப் பட்டது.
2014 ஆம் ஆண்டில் உர்ஜித் படேல் குழுவின் அறிக்கையால் முதலில் பரிந்துரைக்கப் பட்ட இந்த ஒரு கருத்தாக்கமானது, பணப்புழக்கத்தை நிர்வகிப்பதற்கான மத்திய வங்கியின் செயல் கருவித் தொகுப்பின் ஒரு பகுதியாக விரைவில் மாறக்கூடும்.
நிலையான வைப்பு நிதி வசதி என்பது பணப்புழக்கத்தினைத் திரும்பப் பெறச் செய்வதற்காக எந்தவொருப் பிணையமும் வழங்க வேண்டிய அவசியமில்லாத ஒரு வருவாய் தரும் வசதியாகும்.