TNPSC Thervupettagam

நில அதிர்வு ஆபத்துப் பகுதிகளின் நுண்மண்டலமாக்கல் திட்டம்

January 21 , 2020 1644 days 510 0
  • மத்தியப் புவி அறிவியல் அமைச்சகமானது இந்தியாவின் முக்கிய நகரங்களில் நில அதிர்வு அபாயம் ஏற்படும் பகுதிகளின் நுண்மண்டலமாக்கல் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டமானது சில போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நில அதிர்வு நடவடிக்கைகளின் அபாயங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இதுவரை, சிக்கிம் மாநிலத்திலும் பிற 8 நகரங்களிலும் நிலப்பகுதி  வரைபடமாக்கல் செய்யப் பட்டுள்ளது.
  • அந்த 8 நகரங்களாவன டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, குவஹாத்தி, ஜபல்பூர், டேராடூன், அகமதாபாத் மற்றும் காந்திதாம் ஆகியவை ஆகும்.
  • நுண்மண்டலமாக்கல் நுட்பங்கள் நன்கு செயல்படுத்தப்படும் நாட்டிற்குச் சிறந்த உதாரணம் ஜப்பான் ஆகும்.

இது பற்றி

  • இது சில காரணிகளின் அடிப்படையில் பூகம்பப் பாதிப்புக்குள்ளாகக் கூடிய  வாய்ப்பு உள்ள பகுதிகளைப் பிரிக்கும் ஒரு செயல்முறையாகும்.
  • இந்தக் காரணிகளில் அந்தப் பகுதிகளின் புவியியல் மற்றும் புவி இயற்பியல் பண்புகள் ஆகியவை அடங்கும்.
  • அவை நில அதிர்வு, நிலச்சரிவு, எளிதில் திரவமாக்கல், பாறை சரிந்து விழும் ஆபத்து மற்றும் பூகம்பங்களால் ஏற்படும் வெள்ளம் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்