TNPSC Thervupettagam

நில அபகரிப்பு – ஜாமீன் பெற இயலாத குற்றம்

September 18 , 2021 1071 days 508 0
  • தமிழக அரசானது, மதம் மற்றும் சமய  நிறுவனங்களின் சொத்துக்களை அத்துமீறி  அபகரிப்பதை ஜாமீன் பெற இயலாத ஒரு குற்றமாக அறிவித்துள்ளது.
  • தமிழகச் சட்டமன்றமானது இது தொடர்பான ஒரு மசோதாவினை நிறைவேற்றி உள்ளது.
  • இந்த மசோதாவானது 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தைத் திருத்த முனைகிறது.
  • மதம் மற்றும் சமய நிறுவன விவகாரங்களில் ஈடுபாடு உடைய எவரும் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் கோவில் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக புகார் அளிக்க ஒரு வாய்ப்பினை இது அளிக்கிறது.
  • மதம் மற்றும் சமய  நிறுவன விவகாரங்களில் ஈடுபாடு உள்ள எந்தவொரு நபரும் இது தொடர்பாக குற்றவியல் புகார்களை அளிக்கலாம் என்று இது கூறுகிறது.
  • இந்த மசோதா நிறைவேற்றப்படும் வரை கோயில் நிலங்களை அபகரிப்பதற்கு எதிரான புகார்களை பதிவு செய்வதற்கு வேண்டி இந்து சமய அற நிலையத் துறையின் ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்