தலைமைப் பணியாளர்கள் குழு (COSC) கூட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியாளர்களின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான், நில நீர் வழி நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாட்டினை வெளியிட்டுள்ளார்.
இந்தக் கோட்பாடானது, இன்றைய சிக்கலான இராணுவச் சூழலில் நில நீர் வழி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதலைத் தளபதிகளுக்கு வழங்கும் ஒரு முக்கிய வெளியீடாகும்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் போர் மற்றும் சமாதானம் ஆகிய இரு சூழல்களிலும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்வதற்கு ஆயுதப் படைகளுக்கு நிலநீர்வழி செயல்பாட்டுத் திறனை அளிக்கிறது.
முன்னதாக அக்குழு இணைய வெளி நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாட்டை வெளியிட்டது.