TNPSC Thervupettagam

நிழல்கள் இல்லா தினம் 2024 - ஏப்ரல் 24

April 27 , 2024 212 days 270 0
  • சூரியன் நேரடியாக உச்ச நிலையில் இருக்கும் போது, எந்தப் பொருளின் மீதும் நிழல் படாது. இந்நிகழ்வு ஆனது பெங்களூரில் மதியம் 12:17 முதல் 12:23 மணி நேரத்திற்குள் தென்பட்டது.
  • இது +23.5 மற்றும் -23.5 டிகிரி அட்சரேகைக்கு இடையில் அமைந்துள்ள இடங்களில் வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் ஒரு அரிய வான நிகழ்வு ஆகும்.
  • இந்த நிகழ்வின் போது, சூரியன் வானத்தில் மிக உச்சி நிலையை அடையும் போது அனைத்துப் பொருள்கள் மற்றும் உயிரினங்களின் நிழல்கள் மறைந்துவிடும்.
  • சூரியனின் இந்தச் சாய்வானது இரண்டு முறை அட்சரேகைக்கு இணையாக இருக்கும்,  அதாவது உத்தராயணத்தின் போது ஒரு முறையும், தட்சிணாயணத்தின் போது ஒரு முறையும் நிகழும்.
  • சூரியனின் இந்தச் சாய்வானது ஓர் இடத்தின் அட்சரேகையுடன் பொருந்தும் போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.
  • பெங்களூரு தவிர, கன்னியாகுமரி, போபால், ஐதராபாத் மற்றும் மும்பை போன்ற இடங்களிலும் இந்த நிகழ்வு தென்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்