பிரிட்டனின் முதல் சீக்கிய பெண் பாராளுமன்ற உறுப்பினரான பிரீத் கௌர் கில் நிழல் அமைச்சரவையின் உறுப்பினராக எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கார்பைனால் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
அரசின் அமைச்சரவைக்கு பிரதிபிம்பம் ஏற்படுத்தும் வகையில் நிழல் அமைச்சரவையானது எதிர்க்கட்சித் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்படும் ஒரு அணியாகும்.
ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் கட்சியின் குறிப்பிட்ட கொள்கை சார்ந்த பகுதியின் மீது வழிகாட்டவும் அரசின் அதே துறை அமைச்சரை கேள்வி கேட்கவும் நியமிக்கப்படுவர்.
சர்வதேச மேம்பாட்டிற்கான நிழல் அமைச்சராக பரீத் கௌர் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.