TNPSC Thervupettagam
November 28 , 2020 1333 days 724 0
  • நிவர் புயலானது புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.
  • இந்த வெப்பமண்டலச் சூறாவளியானது அதி தீவிரப் புயல் எனும் நிலையிலிருந்து தீவிரப் புயலாக மாறியது.
  • நிவர் என்ற பெயரானது ஈரான் நாட்டினால் வழங்கப் பட்டுள்ளது.
  • நிவர் என்பது நிசர்கா (வங்க தேசம்) மற்றும் கதி (இந்தியா) ஆகியவற்றிற்கு அடுத்து வழங்கப்பட்ட 3வது பெயராகும்.
  • இது 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வட இந்தியப் பெருங்கடல் புயல்களுக்கான புதிய பெயர்ப் பட்டியலிலிருந்து பயன்படுத்தப் பட்டது.
  • இது 13 நாடுகளிலிருந்து, ஒவ்வொரு நாடும் பரிந்துரைத்த 13 பெயர்களின் ஒரு தொகுப்புடன், 169 பெயர்களைக் கொண்டுள்ளது.
  • தாய்லாந்து நாட்டினால் பரிந்துரைக்கப்பட்ட ஆம்பன் புயலானது 2004 ஆம் ஆண்டின் தொடரில் இருந்த ஒரு கடைசிப் பெயராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்