November 28 , 2020
1463 days
781
- நிவர் புயலானது புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.
- இந்த வெப்பமண்டலச் சூறாவளியானது அதி தீவிரப் புயல் எனும் நிலையிலிருந்து தீவிரப் புயலாக மாறியது.
- நிவர் என்ற பெயரானது ஈரான் நாட்டினால் வழங்கப் பட்டுள்ளது.
- நிவர் என்பது நிசர்கா (வங்க தேசம்) மற்றும் கதி (இந்தியா) ஆகியவற்றிற்கு அடுத்து வழங்கப்பட்ட 3வது பெயராகும்.
- இது 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வட இந்தியப் பெருங்கடல் புயல்களுக்கான புதிய பெயர்ப் பட்டியலிலிருந்து பயன்படுத்தப் பட்டது.
- இது 13 நாடுகளிலிருந்து, ஒவ்வொரு நாடும் பரிந்துரைத்த 13 பெயர்களின் ஒரு தொகுப்புடன், 169 பெயர்களைக் கொண்டுள்ளது.
- தாய்லாந்து நாட்டினால் பரிந்துரைக்கப்பட்ட ஆம்பன் புயலானது 2004 ஆம் ஆண்டின் தொடரில் இருந்த ஒரு கடைசிப் பெயராகும்.
Post Views:
781