TNPSC Thervupettagam

நிவாரண நடவடிக்கைகள் – நிதி அமைச்சகம்

July 2 , 2021 1116 days 507 0
  • பொருளாதாரத்திற்காக சில புதிய நிவாரண நடவடிக்கைகளை அரசு அறிவித்து உள்ளது.
  • இது கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டதற்குப் பிறகு அறிவிக்கப்பட்ட முதல் நிவாரண நடவடிக்கை ஆகும்.
  • கீழ்க்காணும் எட்டு நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
  • கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.10 லட்சம் கோடி கடன் உறுதித் திட்டம்.
    • இதில் சுகாதாரத் துறைக்கு ரூ.50,000 கோடியும் சுற்றுலா உள்ளிட்டப் பிற துறைகளுக்கு ரூ.60,000 கோடியும் வழங்கப்படும்.
  • அவசர கால கடன் உறுதித் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோடி வழங்கப் படும்.
  • சிறு நிதியியல் நிறுவனங்களுக்கான கடன் உறுதித் திட்டம் (புதியத் திட்டம்)
    • இதற்கான கடன்தொகை வரம்பானது MCLR வட்டி வீதத்தில் (ஒரு வங்கிக்கான குறைந்த பட்ச கடன் வட்டி வீதம்) இருந்து கூடுதலாக 2%  சதவீதத்துடன் ரூ. 1.25 லட்சமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • சுற்றுலா வழிகாட்டு நிறுவனம் மற்றும் பங்குதாரர்களுக்கான திட்டம்.
    • சுற்றுலாத் துறை பங்குதாரர்கள் ஒவ்வொன்றும் ரூ. 10 லட்சம் வரையிலும் சுற்றுலா வழிகாட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ரூ.1 லட்சம் வரையிலும் கடன் பெற இயலும்.
  • 5 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு மாதத்திற்கான இலவச நுழைவு இசைவுச் சீட்டு.
    • இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை ரூ.100 கோடியாகும்.
    • இந்த வசதியானது 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை அல்லது 5 லட்சம் நுழைவு இசைவுச் சீட்டுகள் வழங்கி முடிக்கப் படும் வரை நடப்பில் இருக்கும்.
  • ஆத்ம நிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டம்நீட்டிப்பு
    • இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான தேதியானது 2021 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் தேதியிலிருந்து 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆக நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • DAP மற்றும் P&K வகை உரங்களுக்குக் கூடுதல் மானியங்கள் வழங்கப்படும்.
  • பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்