TNPSC Thervupettagam

நிஹோன்சுவிற்குப் புவிசார் குறியீடு

October 25 , 2022 636 days 270 0
  • சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டுப் பதிவகத்திடம் ஜப்பானைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் குறியீடு கோரி விண்ணப்பிப்பது இதுவே முதல் முறையாகும்.
  • நிஹோன்ஷு ஜப்பானிய சேக் என்றும் அழைக்கப்படும் ஒரு மதுபானமாகும்.
  • இது நொதித்த அரிசியிலிருந்துத் தயாரிக்கப்படுகின்ற ஒரு சிறப்பு மற்றும் மதிப்பு மிக்க பானமாகக் கருதப் படுகிறது.
  • மக்கள் திருவிழாக்கள், திருமணங்கள் அல்லது இறுதிச் சடங்குகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் பாரம்பரியமாக நிஹோன்ஷு பானத்தினை அருந்துவர் என்றாலும் இது தினசரி அடிப்படையிலும் உட்கொள்ளப்படுகிறது.
  • எனவே, இது ஜப்பானில் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்தப் பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்