இத்தாலியின் மிலனில் நடைபெற்ற BCFN உணவு மன்றத்தால் உணவு நிலைத்தன்மைக்கான குறியீடானது (Food Sustainability Index - FSI) சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான பரில்லா மையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையாகும்.
2018-ல் உணவு உற்பத்தியானது அதிகரித்துள்ள போதிலும் இந்தியாவானது 67 நாடுகளில் 33-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த உணவு நிலைத்தன்மைக்கான குறியீடானது 3 பரந்த பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டது.
உணவு இழப்பு & வீணாகுதல்
நீடித்த விவசாயம் மற்றும்
ஊட்டச்சத்துக்கான சவால்கள்
இது 38 குறியீடுகள் மற்றும் 90 தனிப்பட்ட அளவீடுகளைக் கொண்டுள்ளது. அனைத்து அளவுருக்களும் 100 மதிப்பெண்களை உடையது. குறைந்த மதிப்பெண்ணானது குறைவான நிலைப்புத் தன்மையுடைய நடைமுறைகள் ஆகும்.
பிரான்ஸ் நாடானது முதலிடத்தையும் நெதர்லாந்து, கனடா, பின்லாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உணவு நிலைத்தன்மையில் முதல் 5 இடங்களிலும் உள்ளன.