TNPSC Thervupettagam

நீடித்த தொலைத்தொடர்பு வளர்ச்சிக்காக கார்பன் வெளியீட்டை குறைக்க டிராயின் பரிந்துரைகள்

October 25 , 2017 2636 days 873 0
  • இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், 2011-12 காலத்தை அடிப்படை ஆண்டாக கணக்கிட்டு, 2019-20 ஆண்டிற்குள் 30 சதவிகித அளவிலும், 2022-23 ஆண்டிற்குள் 40 சதவிகித அளவிலும் தொலைத் தொடர்பு துறைகளில் கார்பன் வெளியீட்டை குறைக்க இலக்குகளை நிர்ணயிக்க பரிந்துரைத்துள்ளது.
  • தொலைத்தொடர்பு துறையை பசுமையாக்க அத்துறைக்கு டிராய் அனுப்பிய நீடித்த மற்றும் நிலையான தொலைத் தொடர்பிற்கான அலைமுறை என்பதற்கான பரிந்துரையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தொலைத் தொடர்பு துறையில் டிராய் என்பது ஒரு சுதந்திரமான ஒழுங்குமுறை அமைப்பாகும்.
  • இது 1997-ல் பாராளுமன்றத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
  • இதனுடைய முக்கியமான நோக்கம் தொலைத் தொடர்பு துறையில் நியாயமான மற்றும் வெளிப்படையான சூழலை ஏற்படுத்தித் தருவதாகும்.
  • மேலும் டிராய் ஆனது தொலைத் தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்களை வரையறுத்து அதனை திருத்தியமைக்கவும் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்