முதலாவது நீடித்த நீலப் பொருளாதாரக் கருத்தரங்கானது கென்யாவின் தலைநகரான நைரோபியில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கானது கென்யாவினால் ஒருங்கிணைக்கப்பட்டது. மேலும் ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின.
இக்கருத்தரங்கின் கருத்துருவானது: “நீடித்த வளர்ச்சிக்கான நீலப் பொருளாதாரம் மற்றும் 2030 ஆம் ஆண்டிற்கான பணி நிரல்” என்பதாகும்.
இக்கருத்தரங்கில் இந்தியாவின் சார்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.
நீடித்த நீலப் பொருளாதாரம் என்பது தற்போதைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால தலைமுறையினர் ஆகியோருக்கான சமூக மற்றும் பொருளாதாரப் பயன்களை அளிக்கக் கூடிய கடல்சார் பொருளாதாரமாகும்.
இது கடல்சார் சூழல் அமைப்பினைப் பாதுகாத்தல், அதனை தாங்கும் திறன், அதன் பன்முகத் தன்மை மற்றும் உற்பத்தித் திறனைப் பராமரித்தல் ஆகியவற்றை மீட்டெடுக்கிறது.