TNPSC Thervupettagam

நீடித்த வளர்ச்சி இலக்கு இந்தியக் குறியீடு மற்றும் முகப்புப் பலகை 2019 – 20

December 28 , 2019 1666 days 615 0
  • நிதி ஆயோக் ஆனது நீடித்த வளர்ச்சி இலக்கு (Sustainable Development Goals - SDG) இந்தியக் குறியீடு மற்றும் முகப்புப் பலகை 2019 – 20 என்பதன் இரண்டாவது பதிப்பை வெளியிட இருக்கின்றது.
  • SDG இந்தியக் குறியீட்டின் முதலாவது பதிப்பானது 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப் பட்டது.
  • எந்தவொரு பெரிய நாட்டினாலும் உருவாக்கப்படாத, நாட்டில் உள்ள மாநிலங்கள் அளவில் SDGகளை அடைவதற்கான செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட முதலாவது கருவி இதுவாகும்.
  • நீடித்த வளர்ச்சி இலக்கு இந்தியக் குறியீடு மற்றும் முகப்புப் பலகை 2019 – 20 ஆனது 2030 ஆம் ஆண்டின் SDG இலக்குகளை அடைவதற்காக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளைப் பதிவு செய்கின்றது.
  • இது இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் பிரிவு மற்றும் உலகளாவியப் பசுமை வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து மத்தியப் புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்கத்  துறை அமைச்சகத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்