ஐ.நா. அமைப்பின் 2018-ஆம் ஆண்டின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் அறிக்கையின் படி, (Sustainable Development Goals report) குறிப்பிடத்தகுந்த வகையில் ஓர் தசாப்தத்திற்கும் (Decade) மேலான காலத்தில் உலகில் பட்டினியுடைய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உலகில் தற்சமயம் தோராயமாக 38 மில்லியனிற்கும் அதிகமான ஊட்டச்சத்து குறைபாடுடைய மக்கள் (Undernourished people) உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையானது 2015-ஆம் ஆண்டின் 777 மில்லியன் என்ற அளவிலிருந்து 2016-ஆம் ஆண்டு 815 மில்லியன் எனும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்த அறிக்கையானது போர்கள், மோதல்கள், வறட்சி, பருவநிலை மாறுபாடோடு தொடர்புடைய பேரிடர்கள் ஆகியவை உலகில் வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளில் பின்னடைவை ஏற்படுத்துகின்ற முக்கிய காரணிகளில் ஒன்றாகும் என கூறுகின்றது.
இந்தியா உட்பட உலகின் முக்கிய நாடுகளைக் கொண்ட தெற்காசிய பிராந்தியமானது, குழந்தை திருமணங்கள் விகிதத்தில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. மேலும் 2000-ஆம் ஆண்டு முதல் 2017 -ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்து வைக்கப்படுகின்ற பெண் குழந்தைகளுக்கான ஆபத்துகள் 40 சதவீதம் எனும் அளவிற்கு குறைந்துள்ளது.
மறுபுறம் தெற்காசியப் பிராந்தியத்தின் பல நாடுகளில் 70 சதவீதத்திற்கும் மேலாகத் தண்ணீர் பற்றாக்குறை நிலை (Water stress level) காணப்படுகின்றது. இது வேகமாக நெருங்கி வந்து கொண்டிருக்கிற தண்ணீர்ப் பற்றாக்குறை நிலையை அடையாளப்படுத்திக் காட்டுகின்றது.
இந்த அறிக்கையானது 17 குறிக்கோள்களையும், 169 இலக்குகளையும் கொண்ட, நீடித்த வளர்ச்சிக்கான, 2030-ஆம் ஆண்டு அடைவதற்கு இலக்கிட்டுள்ள வளர்ச்சி நிரல்களின் அடைவினை நோக்கிய முன்னேற்றங்களின் கண்ணோட்டமாகும்.
நீடித்த வளர்ச்சி இலக்குகளானது 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி ஐ.நா. நீடித்த வளர்ச்சி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.