TNPSC Thervupettagam

நீண்டகால – குறைந்த உமிழ்வு மேம்பாட்டு உத்தி

November 19 , 2022 610 days 448 0
  • எகிப்தின் ஷரம் எல் ஷேக்கில் நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் சபையின் 27வது உறுப்பினர்களுக்கான மாநாட்டில் (COP27) பருவநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு ஒப்பந்தத்திடம் இந்தியா இதனைச் சமர்ப்பித்தது.
  • 2022ம் ஆண்டிற்குள்ளாக இந்த ஆவணத்தை UNFCCC அமைப்பின் 195 உறுப்பினர் நாடுகளும் சமர்ப்பிக்க கடமைப்பட்டு உள்ளன.
  • இந்தியாவின் LT-LEDS உத்தி, ஒரு குறைந்த உமிழ்விற்கான பாதைக்கான மாற்றத்திற்கு வேண்டி நிறுவப்பட்டது.
  • இந்த LT-LEDS உத்தியானது, உலக கரிம வரவு செலவுப் பட்டியலில் இந்தியாவிற்கான ஒரு சமபங்கு உரிமைக்காகவும், நியாயமான பங்கிற்காகவும் வேண்டி ஒரு கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
  • அடுத்தத் தசாப்தத்தில் குறைந்தபட்சம் மூன்று மடங்கு என்ற அளவிற்கு தனது அணுசக்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பது என்பதின் மீது இது மையம் கொண்டு உள்ளது.
  • மேலும் இது உயிரி எரிபொருளின் பயன்பாட்டினை, குறிப்பாக பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து பயன்படுத்துவதனை அதிகரிக்கச் செய்வதில் கவனம் செலுத்த எண்ணுகின்றது.
  • மேலும் இது போக்குவரத்துத் துறையில் குறைந்த கரிம வளர்ச்சியினை மேம்படுத்த செய்திடுவதற்காக பசும் ஹைட்ரஜன் என்ற எரிபொருளின் பயன்பாட்டினை அதிகப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்