பிரிட்டனின் இராணி இரண்டாம் எலிசபெத், பிரான்சின் பதினான்காம் லூயிஸ் அவர்களுக்குப் பிறகு, வரலாற்றில் உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது அரசி என்ற பெருமையைப் பெற்றார்.
தற்போது இவர் சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த தாய்லாந்தின் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் அவர்களின் சாதனையை முந்தியுள்ளார்.
1643 முதல் 1715 வரையில் 72 ஆண்டுகள் மற்றும் 110 நாள் ஆட்சி செய்து, பிரான்சின் பதினான்காம் லூயிஸ் நீண்ட காலம் ஆட்சி செய்த ஒரு மன்னராக வரலாற்றில் திகழ்கிறார்.