TNPSC Thervupettagam

நீண்ட காலம் முதல்வராக இருந்த 2வது நபர்

July 25 , 2023 361 days 228 0
  • ஒடிசாவின் நவீன் பட்நாயக் நாட்டிலேயே நீண்ட காலம் பணியாற்றிய இரண்டாவது முதலமைச்சர் ஆவார்.
  • 2000 ஆம் ஆண்டு மார்ச் 05 ஆம் தேதியன்று பொறுப்பேற்ற இவர் 23 ஆண்டுகள் 138 நாட்களாக இந்தப் பதவியில் இருகிறார்.
  • இவர் மேற்கு வங்காளத்தின் ஜோதி பாசுவின் சாதனையினை முறியடித்துள்ளார்.
  • ஜோதிபாசு மேற்கு வங்காளத்தின் முதல்வராக 1977 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி முதல் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 05 ஆம் தேதி வரை 23 ஆண்டுகள் 137 நாட்கள் இந்தப் பதவியினை வகித்தார்.
  • சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் நாட்டிலேயே அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை இன்றும் தன் வசம் கொண்டுள்ளார்.
  • இவர் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 2019 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி வரை 24 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இமயமலைப் பகுதி மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்