நீண்ட கால நீர்ப்பாசனத்திற்காக நிதி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
August 18 , 2017 2715 days 985 0
மத்திய அரசின் ஒப்புதலுடன் நபார்டு வங்கியானது 2018ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மூலம் கூடுதல் பத்திரங்களை வெளியிட்டு 9,20 கோடி ரூபாய் திரட்ட முடிவெடுத்துள்ளது. இந்நிதியானது பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் செயல்படும்.
பிரதம மந்திரியின் தலைமையில் நிகழ்ந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைகள் திட்டத்தின் கீழ் ஏராளமான பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்கள் இந்த நிதியைப் பெறும்.
பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜானா
நிலத்தில் பாசன முதலீடுகளைக் குவித்தல், உறுதி செய்யப்பட்ட பாசனத்தின் கீழ் பயிரிடக்கூடிய நிலப்பகுதியை விரிவுபடுத்துதல், தண்ணீர் வீணாவதைக் குறைப்பதற்கு விளைநில நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல், சரியான நீர்ப்பாசன முறையை பின்பற்றுவதை அதிகரித்தல், மற்றும் நீர் சேமிப்புத் தொழில் நுட்பங்கள் (ஒரு துளிக்கு நிறைய பயிர்), நீர்த்தேக்கங்கள் நிரப்புவதை அதிகரித்தல், மற்றும் நகர்ப்புறங்களில் பயன்படுத்திய நீரை மறுசுழற்சிக்குப் பின்பு மீண்டும் விவசாயத்திற்குப் பயன்படுத்துதல் மற்றும் துல்லிய நீர்ப்பாசன முறையின் மூலம் அதிக முதலீட்டை ஈர்த்தல்.