நீண்ட வால் கொண்ட மற்றும் மீன் உண்ணும் ஐரோப்பிய வாத்துகள்
April 10 , 2023
600 days
270
- அரிய நீண்ட வால் கொண்ட வாத்து இனமானது, காஷ்மீரில் உள்ள வுலார் ஏரியில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளது.
- இந்த வாத்துகள் கடைசியாக 1939 ஆம் ஆண்டில் F லுட்லோ என்பவரால் ஹோகர்சர் எனுமிடத்தில் கண்டறியப் பட்டன.
- இவை மெல்லிய, நீண்ட வால் கொண்ட வண்ணமயமான கடல் வாத்து இனங்கள் ஆகும்.
- இவை அடிக்கடி நெருக்கமான திரள் கூட்டங்களை உருவாக்கி விரைவாகவும் தாழ்வாகவும் மாறி மாறி பறக்கக் கூடியவை ஆகும்.
- நீண்ட வால் கொண்ட இந்த வாத்துகள் அலாஸ்கா மற்றும் ரஷ்யாவிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் வழியில் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு வந்து போகின்றன.
- ஸ்மியூ (மார்கெல்லஸ் அல்பெல்லஸ்) என்பது அனாடிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர அளவிலான வாத்துகளாகும்.
- ஸ்மியூ என்பது யூரேசியா மற்றும் ஐரோப்பா ஆகிய இரண்டு பகுதிகளிலும் காணப் படும் ஓர் இனமாகும்.
- இவை இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மிகவும் அரிதாகவே வருகின்றன.
Post Views:
270