TNPSC Thervupettagam

நீதிக் கடிகாரம் (பலகை) - மதராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை

November 2 , 2019 1906 days 809 0
  • மதராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நிர்வாகம்சார் நீதிபதியான டி.எஸ்.சிவஞானம் என்பவர் நீதிமன்ற வளாகத்தில் 'நீதிக் கடிகாரத்தை (பலகை)' திறந்து வைத்தார்.
  • நீதிக் கடிகாரம் என்பது பின்வரும்  தகவல்களைக் காட்டும் ஒரு ஒளி-உமிழ் இருமுனைய (light-emitting diode - LED) காட்சிப் பலகையாகும்.
    • நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப் படுதல், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றங்களால் தீர்த்து வைக்கப்பட்ட வழக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் தரவரிசை.
    • பணியாற்றிக் கொண்டிருக்கும் நீதிபதிகளின் பெயர்கள்.
    • நீதிபதிகளின் செயல்பாடுகள் அடிப்படையில் அவர்களது தரவரிசை.
  • இந்தக் கடிகாரத்தின் முக்கிய நோக்கம் நீதித் துறை சார்ந்த தகவல்களைப் பரப்புவதும் சாதாரண மக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும்.
  • இந்தியா முழுவதும் உள்ள 3,350 நீதிமன்றங்களுக்குமான இந்த யோசனையானது 2017 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமரால் முன்மொழியப் பட்டது.
  • முதல் கட்டமாக, இந்த நீதிக் கடிகாரங்கள் 24 உயர் நீதிமன்றங்களில் நிறுவப்பட இருக்கின்றன. பின்னர் அது மற்ற அனைத்து நீதிமன்றங்களுக்கும் நீட்டிக்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்