TNPSC Thervupettagam

நீதித்துறைச் செயல்முறை மற்றும் அவற்றின் சீர்திருத்தங்கள் பற்றிய 133வது அறிக்கை

August 15 , 2023 342 days 212 0
  • இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்குப் பணியாளர்கள், பொதுமக்கள் குறை தீர்ப்பு, சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.
  • மேலும் ஒரு வருடத்தில் ஓரிரு மாதங்களுக்கு நீதிமன்றங்களை முழுமையாக மூடுவது குறித்து நீதித் துறைக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
  • இந்தக் குழு ஆறு சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது. அவையாவன:
    • உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூகப் பன்முகத் தன்மை;
    • உச்ச நீதிமன்றத்தின் பிராந்திய அமர்வுகளுக்கான சாத்தியக் கூறுகள்;
    • உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்தல்;
    • உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் விடுமுறைகள்;
    • உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களது சொத்துக்கள் குறித்தத் தகவல்களைக் கட்டாயமாக அறிவிக்க வேண்டும்;
    • உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் ஆண்டு அறிக்கைகள் தயாரித்தல் மற்றும் அதனை வெளியிடுதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்