மெக்சிகோவின் பேரவையாளர்கள் மிகவு சர்ச்சைக்குரிய ஒரு நீதித்துறை சீர்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்தப் புதிய நடவடிக்கைகளின் கீழ், நாட்டின் உச்ச நீதிமன்றம் உட்பட - அனைத்து மட்டங்களிலும் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்களுக்கு அனுமதி வழங்கும் உலகின் முதல் நாடாக மெக்சிகோ மாற உள்ளது.
அங்கு உச்ச நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் பொதுவாக அதிபர் சமர்ப்பித்த இறுதிப் பட்டியலில் இருந்து பேரவையினால் உறுதிப்படுத்தப்படுகின்றனர்.
இந்த மசோதா 11 ஆக இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 9 ஆகக் குறைத்து, அவர்களின் பதவிக் காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது.
இது 35 வயதிற்குட்பட்ட நபர் என்ற குறைந்தபட்ச வயது என்ற நிபந்தனையினை நீக்கி உள்ளது என்பதோடு மேலும் கட்டாயப் பணி அனுபவத்தைப் பாதியாக குறைத்து ஐந்து ஆண்டுகளாக நியமித்துள்ளது.