நீதித்துறை நியமனங்களில் ஏன் தாமதம் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
October 28 , 2017 2632 days 906 0
மத்திய அரசின் மிக உயர்ந்த சட்டப்பதவியான இந்திய தலைமை வழக்குரைஞருக்கு, நீதிபதிகள்K. கோயல் மற்றும் U.U. லலித் அடங்கிய அமர்வானது, நீதிமன்ற நியமனங்களில் தொடர்ந்து தாமதம் ஏன் எனவும், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனங்களை புரிந்துணர்வு செயல்முறை (MoP) அடிப்படையில் நிரப்பாதது ஏன் எனவும் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளது.
முன்னதாக அக்டோபர் 2015-ல், அரசியலமைப்பு அமர்வானது, அரசின் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தினை ரத்து செய்தது.
டிசம்பர் 2015ல், உச்சநீதிமன்றமானது, மத்திய அரசிற்கு, உச்சநீதிமன்ற / உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் என்ற பட்டியல் ஒன்றினைத் தயாரித்து வழங்க அறிவுரை வழங்கியது.
மேலும், உயர்நீதிமன்றங்களுக்கு தற்காலிக தலைமை நீதிபதி பொறுப்பில் நீதிபதிகளை அமர்த்துகின்ற செயலினை, ஒரு மாதத்திற்கு மேல் நீட்டிப்பு செய்யக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
24 உயர்நீதிமன்றங்களில், 6 உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி பொறுப்புகள் மாதக் கணக்கில் நிரப்பப்படவில்லை.