TNPSC Thervupettagam

நீதிபதிகளின் பதவி உயர்வு குறித்து உச்ச நீதிமன்றம் 2024

September 14 , 2024 17 days 62 0
  • நீதிபதிகளின் பதவி உயர்வுக்கான பரிந்துரையை உயர் நீதிமன்ற (HC) தலைமை நீதிபதி தனியாக மறுபரிசீலனை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் (SC) தீர்ப்பு அளித்துள்ளது.
  • உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவானது கூட்டாகச் செயல்படுவதன் மூலம் மட்டுமே இந்தப் பரிசீலனையினை மேற்கொள்ள முடியும்.
  • உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவில் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் உள்ளனர்.
  • உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவானது, நீதிபதிகள் நியமனங்கள் குறித்த பரிந்துரையை மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவிற்கு அனுப்புகிறது.
  • இறுதி முடிவுகள் இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளின், நீதிபதிகள் தேர்வுக் குழுவினால் மேற்கொள்ளப் படுகின்றன.
  • நாட்டில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்வது குறித்தும் மூன்று மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட இந்த நீதிபதிகள் தேர்வுக் குழு முடிவு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்