தமிழக அரசு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு தனி நபர் குழுவை அமைத்துள்ளது.
சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) 2015 என்றச் சட்டத்தின் கீழ் செயல்படும் இல்லங்களைத் திறம்பட நிர்வகிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வது இதற்கானப் பணியாகும்.
இவர் உள்கட்டமைப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து, பணியாளர்கள் தேவை, பராமரிப்புச் சிக்கல்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்கேற்பு போன்றவை குறித்து ஆய்வு செய்து அதற்கேற்ப பரிந்துரைகளை வழங்குவார்.