TNPSC Thervupettagam
March 27 , 2025 6 days 37 0
  • இந்தியத் தலைமை நீதிபதி (CJI) சஞ்சீவ் கன்னா, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியான யஷ்வந்த் வர்மாவின் நடத்தை குறித்த மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு உள்ளக விசாரணையைத் தொடங்கினார்.
  • இதற்கிடையில், அந்த நீதிபதி வர்மாவின் நீதித்துறைப் பணிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன /திரும்பப் பெறப்பட்டுள்ளன.
  • நீதித்துறையின் கீழ் உள் விசாரணையானது, அரசியலமைப்பின் கீழான பதவி நீக்க நடவடிக்கையிலிருந்து வேறுபட்ட ஒரு செயல்முறையைப் பின்பற்றுகிறது.
  • ஒரு நீதிபதிக்கு எதிரான புகார் ஆனது இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களால் அல்லது அவர்களிடம் மட்டுமே முன் வைக்கப்பட வேண்டிய அவசியமில்லை.
  • ஒரு நீதிபதிக்கு எதிரான புகாரை விசாரிக்க இந்தியத் தலைமை நீதிபதி அல்லது ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் அழைக்கலாம்.
  • விசாரணை முடிந்ததும், அந்தக் குழுவானது தனது அறிக்கையை இந்தியத் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கும்.
  • அக்குற்றச்சாட்டுகள் ஆனது பதவி நீக்க நடவடிக்கைகளைத் தொடங்கும் அளவுக்கு தீவிரமானவை என்று குழு முடிவு செய்தால், சம்பந்தப்பட்ட நீதிபதியைத் தானாக முன் வந்து இராஜினாமா செய்ய அல்லது ஓய்வு பெற என்று இந்தியத் தலைமை நீதிபதி அறிவுறுத்துவார்.
  • அந்த நீதிபதி இராஜினாமா செய்யவோ அல்லது ஓய்வு பெறவோ வழங்கப்பட்ட இந்தியத் தலைமை நீதிபதியின் ஒரு அறிவுரையை ஏற்க மறுத்தால், பணியகற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்ற அந்தக் குழுவின் முடிவை இந்தியத் தலைமை நீதிபதி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு தெரிவிப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்