தமிழ்நாடு மாநில அரசானது கோயம்புத்தூரில் உள்ள 157 ஆண்டு காலப் பழமையான குதிரை வண்டி நீதிமன்றக் கட்டிடத்தைப் புனரமைப்பதற்காக ரூ. 19.93 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
சேலம், காஞ்சிபுரம் மற்றும் நாகர்கோவில் ஆகியவற்றில் உள்ள இதர 3 பாரம்பரிய நீதிமன்றக் கட்டிடங்களும் புனரமைக்கப்பட இருக்கின்றன.
மாநிலப் பொதுப் பணித் துறையானது இந்தப் புனரமைப்புப் பணியினை மேற்கொள்வதற்காக சுண்ணாம்புக் கல் போன்ற மூலப்பொருட்களை உற்பத்தி செய்ய இருக்கின்றது.