இது நீருக்கடியில் உள்ள கண்ணி வெடிகளைக் கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தானியங்கு கடலடி வாகனம் (AUV) ஆகும்.
இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகையிலான முதல் ரக வாகனமாகும்.
இது கொல்கத்தாவில் அமைந்துள்ள போர்க் கப்பல் தயாரிப்பு நிறுவனமான கார்டன் ரீச் கப்பல் கட்டமைப்பு மற்றும் பொறியியல் நிறுவனம் மற்றும் AEPL எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப் பட்டுள்ளது.
வணிக ரீதியானப் பயன்பாட்டிற்கு முன்பு இது இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் இராணுவம் ஆகியவற்றினால் பயனர் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.