TNPSC Thervupettagam

நீராவி மூலம் இயக்கப்படும் விண்கலம்

December 8 , 2022 721 days 404 0
  • ஜப்பானின் விண்வெளி நிறுவனமானது, சந்திரனை நோக்கி அனுப்பப்பட்டுள்ள EQUULEUS எனப்படும் விண்கலத்தினை இயக்குவதற்கு உலகிலேயே முதன்முறையாக நீராவியினைப் பயன்படுத்தியதாக அறிவித்துள்ளது.
  • இது நாசாவின் ஓரியன் விண்கலத்தில் விண்வெளி சார்ந்தப் பொருட்களுள் ஒன்றாக ஏவப்பட்டது.
  • JAXA நிறுவனத்தின் கருத்துப் படி, நீர் சார்ந்த உந்துவிசை அமைப்பைப் பயன்படுத்தி புவி தாழ்மட்ட சுற்றுப்பாதைக்கு அப்பாற்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உலகின் முதல் வெற்றிகரமான சுற்றுப்பாதை நிலை நிறுத்துதல் அமைப்பு இதுவாகும்.
  • இது தகவல்தொடர்பு கருவியில் இருந்து வெளியேறும் வெப்பத்தைப் பயன்படுத்தி தண்ணீரை நீராவியாக மாற்றுவதோடு, அதற்கு ஒரு உந்துதலையும் உருவாக்குகிறது.
  • கியூப்சாட் செயற்கைக் கோளானது, தோராயமாக ஒன்றரை ஆண்டுகளில் பூமி மற்றும் சந்திரன் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட இரண்டாவது லெக்ராஞ்சியன் பகுதியினை (EML2) அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • லெக்ராஞ்சியன் பகுதிகள் என்பது கோள்கள் போன்ற பெரிய பொருட்களின் ஈர்ப்பானது விண்கலத்தின் மைய விலக்கு விசையால் சமநிலைப்படுத்தப்பட்டு, மிகவும் நிலையான சுற்றுப்பாதையை மேற்கொள்ள வழிவகுக்கும் விண்வெளியில் உள்ள சில குறிப்பிட்ட இடங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்