TNPSC Thervupettagam

நீருக்கடியிலான கண்காணிப்பு பிணையம் - சீனா

January 3 , 2018 2390 days 753 0
  • தனது கப்பற்படைக்கு நவீன மேலாதிக்கத்தை அளிப்பதற்கும் , அவை எதிர்ப்பாளிகளின் கப்பல்களை இலக்கிட்டு தொடர்ச்சியாக,  துல்லியமாக கண்காணிப்பதற்கும் உதவும் வண்ணம் இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடலில் சீனா ஓர் நீருக்கடியிலான கண்காணிப்பு பிணையத்தை (Underwater Surveillance Network) ஏற்படுத்தியுள்ளது.
  • கடல் அடையாள மிதவைகள் (Buoy),  மேற்பரப்புக் கடற்படகுகள்,  செயற்கைக்கோளின் உதவிகள்,  நீருக்கடியிலான கிளைடர்கள் போன்ற பல்வேறு தொழில்நுட்ப தளங்களின் பிணையத்தினால் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் மூலம் தென்சீனக் கடல்,  மேற்கு பசுபிக்,  இந்திய பெருங்கடல் போன்றவற்றில் பல்வேறு அம்சங்களைப் பற்றிய தரவுத் திரட்டல்கள் மேற்கொள்ளப்படும்.
  • நீருக்கடியிலான பகுதிகளின் சூழலமைவு (Under Water Environment), குறிப்பாக நீருக்கடியிலான பகுதிகளின் தட்பவெட்பம்,  அவற்றின் உவர்தன்மை போன்றவற்றைப் பற்றியத் தகவல் இப்பிணையத்தின் மூலம் திரட்டப்படும்.
  • இத்தரவுகளுடைய பயன்பாட்டின் மூலம் இலக்கிடப்பட்ட கப்பல்களை துல்லியமாக தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
  • மேலும் சீன கடற்படைக்கு அவற்றின் கடற்பயண வழிக்காட்டல் அமைப்பையும் (Navigation), அதன் நிலைகொள் சுட்டலையும் (Positioning) இதன் மூலம் மேம்படுத்த இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்