பண்டையத் தமிழர்களின் கடந்த கால வாணிபத் தொடர்பு முறையை வெளிக் கொண்டு வரும் முயற்சியில், மாநில தொல்பொருள் துறையானது நீருக்கடியிலான அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.
இது சங்க காலம் மற்றும் இடைக் காலங்களில் பரவியிருந்த துறைமுக நகரங்கள் மற்றும் அவை சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும்.
இதன் நோக்கம் - கிரேக்கம், ரோமானியர் மற்றும் அராபிய வியாபாரிகளுடன் மேற்கொண்டிருந்த வர்த்தக உறவுகளை ஆய்வு செய்வதாகும்.
மாமல்லபுரம், பூம்புகார், கொற்கை மற்றும் அரிக்கமேடு ஆகிய நகரங்களின் அருகேயுள்ள கடற்கரைப் பகுதிகளில் பொதுவாக கவனம் செலுத்தப்படும்.
கடைசியாக 1990களில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட நீருக்கடியிலான அகழாய்வுகள் பூம்புகாருக்கு அருகே மேற்கொள்ளப்பட்டதாகும்.