TNPSC Thervupettagam

நீருக்கடியிலான தொல்பொருள் அகழாய்வுகள் - தமிழ்நாடு

September 1 , 2019 1969 days 863 0
  • பண்டையத் தமிழர்களின் கடந்த கால வாணிபத் தொடர்பு முறையை  வெளிக் கொண்டு வரும் முயற்சியில், மாநில தொல்பொருள் துறையானது நீருக்கடியிலான அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.
  • இது சங்க காலம் மற்றும் இடைக் காலங்களில் பரவியிருந்த துறைமுக நகரங்கள் மற்றும் அவை சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும்.
  • இதன் நோக்கம் - கிரேக்கம், ரோமானியர் மற்றும் அராபிய வியாபாரிகளுடன் மேற்கொண்டிருந்த வர்த்தக உறவுகளை ஆய்வு செய்வதாகும்.
  • மாமல்லபுரம், பூம்புகார், கொற்கை மற்றும் அரிக்கமேடு ஆகிய நகரங்களின் அருகேயுள்ள கடற்கரைப் பகுதிகளில் பொதுவாக கவனம் செலுத்தப்படும்.
  • கடைசியாக 1990களில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட நீருக்கடியிலான அகழாய்வுகள் பூம்புகாருக்கு அருகே மேற்கொள்ளப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்