TNPSC Thervupettagam

நீரேற்றம் பெற்ற முப்பரிமாண களிமம் - IISc

July 13 , 2024 5 days 66 0
  • இந்திய அறிவியல் கழகத்தின் அறிவியலாளர்கள் மனித நுரையீரலைப் பிரதிபலிக்கும் வகையிலான ஒரு புதிய நீரேற்றம் பெற்ற முப்பரிமாண களிம உருவாக்க அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
  • காசநோய் பாக்டீரியா நுரையீரல் செல்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கண்டறிந்து ஆய்வு செய்வதற்காகவும், நோய்த் தொற்றுக்கு என்று சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப் படும் சிகிச்சை முறைகளின் செயல்திறனை பரிசோதிக்கச் செய்வதற்காகவுமான தளத்தை வழங்குகிறது.
  • இந்தப் புதிய நீரேற்றத்தினைப் பெற்ற களிம உருவாக்க அமைப்பானது நுரையீரல் திசுக்களின் முக்கிய அங்கமான கொலாஜனால் (தசை நார்களால்) ஆனது.
  • இந்த முப்பரிமாணச் சூழல் ஆனது, காசநோய் பாக்டீரியா நீண்ட காலத்திற்கு - மூன்று வாரங்கள் வரை மனித நோயெதிர்ப்பு உயிரணுக்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதைக் கண்காணிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு வழி வகுக்கிறது.
  • மைக்கோபாக்டீரிய டியுபர்குலோசிஸ் (Mtb) என்பது ஒரு ஆபத்தான நோய்க் கிருமி ஆகும்.
  • 2022 ஆம் ஆண்டில், இது 10.6 மில்லியன் மக்களை பாதித்து, சுமார் 1.3 மில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்