TNPSC Thervupettagam

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து உந்துவிசை ஏவுகணை

November 2 , 2022 628 days 345 0
  • ஐஎன்எஸ் அரிஹந்த் கப்பலானது, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவப்படும் உந்துவிசை ஏவுகணையை (SLBM) வங்காள விரிகுடா பகுதியில் இருந்து வெற்றிகரமாக ஏவியது.
  • அணுசக்தி ஆற்றல் மும்மை அமைப்பினை அடைவதற்கு நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து அணு ஆயுதங்களை ஏவுவதற்கான திறன் முக்கியமான ஒன்றாகும்.
  • அணு மும்மை அமைப்பு என்பது நிலம், விமானம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து அணு ஏவுகணைகளை ஏவக்கூடிய திறன் கொண்ட மூன்று முனை இராணுவப் படைக் கட்டமைப்பைக் குறிக்கிறது.
  • நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவப்படும் உந்துவிசை ஏவுகணைகள் சில நேரங்களில் APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவாக பெயரிடப்பட்ட K ரக ஏவுகணைகள் என்று அழைக்கப் படுகின்றன.
  • அவை பாதுகாப்பு மற்றும் இராணுவ மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்டது.
  • ஐஎன்எஸ் அரிஹந்த் என்பது இந்தியாவினால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, அணு சக்தியால் இயங்கக்கூடிய ஏவுகணையைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்ட நீர் மூழ்கிக் கப்பலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்