இந்தியக் கடற்படையானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 08 அன்று நீர்மூழ்கிக் கப்பல் தினத்தை அனுசரிக்கிறது.
1967 ஆம் ஆண்டில் இந்த தினத்தில் இந்தியாவின் முதலாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி (INS Kalvari) இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டதை நினைவுகூறும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
பாக்ஸ்டிரோட் வகையைச் சார்ந்த நீர்மூழ்கிக் கப்பலானது 29 ஆண்டுகால சேவைக்குப் பின்பு 1996 ஆம் ஆண்டு மே 03 அன்று இந்தியக் கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றது.
அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்த் நவம்பர் 05 அன்று இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டதன் மூலம் நீர், நில மற்றும் வான்வழி ஆகிய மூன்றிலும் அணு ஆயுத (Nuclear trait) வல்லமையை இந்தியா பெற்றுள்ளது நினைவில் கொள்ள வேண்டியதாகும்.