உலக வள நிறுவனம் (WRI) ஆனது நீர்வளஇடர் விளக்கப்படம் என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும், 25 நாடுகள் அல்லது உலக மக்கள்தொகையில் கால் பங்கு மக்கள் தொகையினர் தற்போது மிக மோசமான நீர்வளம் சார்ந்த ஒரு நெருக்கடி நிலைக்கு ஆளாகின்றனர்.
அதாவது இவர்கள், 80 சதவீதத்திற்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க நீர் வளத்தினைப் பாசனம், கால்நடைகள், தொழில்துறை மற்றும் வீட்டுத் தேவைகள் ஆகியவற்றிற்குப் பயன்படுத்துகின்றனர்.
உலகளவில், உலக மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதம் பேர் ஓராண்டில் குறைந்தது ஒரு மாதமாவது மிக மோசமான அளவிலான நீர்வளப் பற்றாக்குறை சூழ்நிலையில் வாழ்கின்றனர்.
2050 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது 60 சதவீதத்தினை நெருங்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
‘தண்ணீர்ப் பற்றாக்குறை நிலை’ என்பது தண்ணீருக்கான தேவையானது, தண்ணீர் கிடைக்கப் பெறும் அளவை விட அதிகமாகும் நிலை அல்லது தரம் குறைந்த தண்ணீரானது நீரின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் போக்கு என்று வரையறுக்கப் படுகிறது.
25 மிக மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
மிக மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகள் மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகியனவாக உள்ள நிலையில், இங்கு 83 சதவீத மக்கள் மிக மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்காசியாவின் 74 சதவீத மக்கள் மிக மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2050 ஆம் ஆண்டில் இதில் பாதிக்கும் அதிகமானப் பாதிப்பினை இந்தியா, மெக்சிகோ, எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நான்கு நாடுகள் கொண்டிருக்கும்.
2050 ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகளின் நீர் தேவையானது 20-25 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.