கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகமானது (IIT) நீர்வளங்களை திரும்ப நிறைவாக்கவும் புத்துயிர் பெறச் செய்யவும் நீர் மறுசுழற்சி ஆராய்ச்சி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
இது இரண்டு முன்னாள் மாணவர்களான அனீஷ் ரெட்டி & ஆதித்யா சௌபே ஆகியோரால் ஆரம்ப நிதி அளிக்கப்படுவதையடுத்து ஆதித்யா சௌபே நீர் மறுசுழற்சி ஆராய்ச்சி மையம் என பெயரிடப்பட்டுள்ளது.
நகர்ப்புற இந்தியா எதிர் நோக்கும் இரண்டு முக்கியமான சிக்கல்களான கழிவுநீர் அகற்றுதல் மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றை கையாள்வதே இம்மையத்தின் நோக்கங்கள் ஆகும்.