TNPSC Thervupettagam

நீர் ஸ்டிரைடர் என்ற புதிய வகை உயிரினங்கள்

March 19 , 2018 2443 days 868 0
  • இந்திய விலங்கியல் ஆராய்ச்சியமைப்பைச் சேர்ந்த அறிவியலாளர்கள் நாகலாந்தில் நீர் ஸ்டிரைடர் (Water Strider) என்ற புதிய வகை உயிரினங்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • டிலோமேராநாகாலந்தா ஜெஹமலர் (Ptilomeranagalanda jehamalar) மற்றும் சந்திரா (Chandra) என்று பெயரிடப்பட்ட இந்த உயிரினங்கள் பெரன் மாவட்டம் இந்தாங்கி நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • முதுகுப்புறத்தில் உள்ள கறுப்பு நிறக் கோடுகள், இவற்றை இந்த வகையின் துணைப் பிரிவான டிலோமேரா (Ptilomera) என்ற துணையின வகையிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது.
  • இந்தியாவில் டிலோமேராவின் உட்பிரிவாக 5 வகை நீர் ஸ்டிரைடர் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் பின்வருபவை உள்ளடங்கும்.
1.     டிலோமேராகிரியோட்ஸ் தீபகற்ப இந்தியா
2.     டிலோமேராஆசமேன்சிஸ் வடகிழக்கு இந்தியா
3.     டிலோமேராலடிகைவுதாதா வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா
4.     டிலோமேராக்சிடென்டாலிஸ் உத்தராகண்ட்
5.     டிலோமேராடிக்ரினா அந்தமான் தீவுகள்
  • டிலோமேராநாகாலந்தா கண்டுபிடிப்போடு சேர்த்து இந்தியாவில் டிலோமேரா உட்பிரிவைச் சேர்ந்த உயிரினங்கள் ஆறாக உயர்ந்துள்ளது.
  • நீர் ஸ்டிரைடர்ஸ் நீரின் மேற்பரப்பின் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வாழ்க்கையை தகவமைத்துக் கொள்ளும் வகையைச் சேர்ந்த பூச்சியினங்கள் ஆகும். இத்தகைய ஆதாயத்திற்காக அவை தரையின் இறுக்கத்தை பயன்படுத்திக் கொள்ளும். இதனுடைய இருப்பு நீரின் தரத்தை உறுதி செய்யும்.
  • மேலும் இவை நீரின் தரத்தை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், கொசுவின் லார்வாக்களை உணவாகக் கொண்டு உணவுச் சங்கிலியிலும் முக்கிய இடத்தை இந்த நீர் ஸ்டிரைடர்கள் வகிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்