சுற்றுலாத் துறையை மிகவும் நன்கு மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஆறு புதிய முன்னெடுப்புகளைத் தமிழக முதல்வர் அறிவித்தார்.
கூடலூரில் 26.6 கோடி ரூபாய் செலவில் 300 குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்ற நிலையில் இது கலைஞர் நகர் என்று அழைக்கப்படும்.
சுமார் 10 கோடி ரூபாய் செலவில் "பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம்", 5 கோடி ரூபாய் செலவில் பத்து பேருந்துகளுடன் கூடிய "ஹாப்-ஆன், ஹாப்-ஆஃப்" இடை நிறுத்தச் சுற்றுலா சேவைகள், 20 கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய பல்லடுக்கு வாகன நிறுத்த வசதி, நடுகாணியில் சுற்றுச்சூழல் சார் சுற்றுலா வசதிகள் மற்றும் ஆதிவாசிச் சமூகங்களுக்காக 23 சமூக அரங்குகள் மற்றும் சுமார் 200 வீடுகள் அமைப்பது ஆகியவற்றைக் கட்டமைப்பதற்கான ஒரு திட்டத்தினையும் அவர் அறிவித்துள்ளார்.