பல பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்த போதிலும், நீலகிரியின் சிகூர் பீடபூமியில் உள்ள வெண்முதுகுக் கழுகு (ஜிப்ஸ் பெங்காலென்சிஸ்) இனங்களுக்கான எதிர்காலம் மிகவும் ஆபத்தானதாக உள்ளது.
அவை மிக அருகி வரும் நிலையில் உள்ள இனங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சிகூரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, 2013 ஆம் ஆண்டில் 152 ஆக இருந்த எண்ணிக்கையானது 2017 ஆம் ஆண்டில் 167 என்ற எண்ணிக்கையினை எட்டியது.
சீகூரில் இவற்றின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையினை இந்த ஆய்வு எடுத்துக் காட்டியுள்ளது.
2013 முதல் 2017 ஆம் ஆண்டு வரை 46 வெண்முதுகுக் கழுகுகள் உயிரிழந்துள்ளன.