TNPSC Thervupettagam

நீலகிரி வரி வண்ணத்துப்பூச்சி

October 26 , 2024 28 days 59 0
  • நீலகிரி வரி வண்ணத்துப்பூச்சி ஆனது (ஹிப்போலைசீனா நீல்கிரிக்கா) ஒரு பெரிய நிலப்பரப்பு ஆர்க்கிட் தாவரத்தை அதன் ஓம்புயிரியாகப் பயன்படுத்துகிறது.
  • இந்தியாவில் ஒரு வண்ணத்துப்பூச்சி என்பது இந்த குறிப்பிட்ட வகை தாவரங்களை ஓம்புயிரியாகப் பயன்படுத்தியதாக பதிவான முதல் பதிவு இதுவாகும்.
  • 1884 ஆம் ஆண்டு நீலகிரியில் உள்ள குன்னூரில் முதன் முதலில் மிக விவரிக்கப்பட்ட நீலகிரி வரி வண்ணத்துப் பூச்சியானது, அதன் பிறகு இலங்கையில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • யூலோபியா எபிடென்ட்ரேயா என்ற ஒரு லார்வா ஓம்புயிரித் தாவரத்தின் மஞ்சரியில் (முழுமையாக மலர்ந்த பகுதி) நீலகிரி வரி வண்ணத்துப் பூச்சி முட்டையிடுவது என்பது குறிப்பிடத் தக்கது ஆகும்.
  • இந்த நிலப்பரப்பு ஆர்க்கிட் தாவரம் ஆனது ஈரப்பதமான பகுதிகளில் உள்ள பாறைப் சரிவுப் பகுதிகளில் காணப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்