TNPSC Thervupettagam

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு

April 30 , 2024 208 days 318 0
  • நீலகிரி வரையாடு (நீலகிரிட்ராகஸ் ஹைலோக்ரியஸ்) அழிந்து வரும் இனம் என்ற நிலையில் இருந்து அகற்ற வேண்டும் என்ற தீர்மானத்துடன், தமிழக அரசு மாநில விலங்கினங்கள் குறித்த ஒத்திசைவுக் கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது.
  • IUCN அமைப்பின் பிரதிநிதியும் இந்தக் கணக்கெடுப்பில் ஒரு பார்வையாளராக இதன் அங்கத்தினராக இடம் பெற்றுள்ளார்.
  • இந்த விலங்கானது IUCN அமைப்பின் அழிந்து வரும் உயிரினமாகப் பட்டியலிடப்பட்டு உள்ளது மற்றும் 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் முதலாவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப் படுகிறது.
  • 2015 ஆம் ஆண்டு உலக வனவிலங்கு நிதியம்- இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தற்போது, மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 3,000 வரையாடுகள் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்