நீலகிரி வரையாடு (நீலகிரிட்ராகஸ் ஹைலோக்ரியஸ்) அழிந்து வரும் இனம் என்ற நிலையில் இருந்து அகற்ற வேண்டும் என்ற தீர்மானத்துடன், தமிழக அரசு மாநில விலங்கினங்கள் குறித்த ஒத்திசைவுக் கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது.
IUCN அமைப்பின் பிரதிநிதியும் இந்தக் கணக்கெடுப்பில் ஒரு பார்வையாளராக இதன் அங்கத்தினராக இடம் பெற்றுள்ளார்.
இந்த விலங்கானது IUCN அமைப்பின் அழிந்து வரும் உயிரினமாகப் பட்டியலிடப்பட்டு உள்ளது மற்றும் 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் முதலாவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப் படுகிறது.
2015 ஆம் ஆண்டு உலக வனவிலங்கு நிதியம்- இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தற்போது, மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 3,000 வரையாடுகள் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.